தாய்பால்

முருங்கை போதும் தாய்பால் சுரக்கும்

முருங்கையில் மதிப்புக்கூட்டப்பட்ட பால்:

நம் நாட்டில் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் முருங்கை மரம் ஓர் குடும்ப உறுப்பினர் போல் உள்ளது.

முருங்கையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருப்பதால் சத்து பற்றாக்குறையை நிர்வர்த்தி செய்ய உதவுகிறது

இந்தியாவில் மட்டும் சுமார் 375 மில்லியன் குழந்தைகள் சத்துப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சத்துப்பற்றாக்குறை நோய் வராமல் தடுக்கவும் வந்தபின் குணப்படுத்தவும் உணவில் உள்ள சத்துக்களே சிறந்தது.

முருங்கையானது 300 வகையான நோய்கள் வராமல் தடுப்பதுடன் 67 வகை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

முருங்கையில் 90 வகையான சத்துக்களும் 46 வகையான மருத்துவ தன்மையும் உள்ளது 100 கிராம் உலர்ந்த முருங்கை இலையில் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்தைவிட 100 மடங்கும், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தைவிட 15 மடங்கும், பாலில் உள்ள கால்சியம் சத்தை விட 17 மடங்கும், தயிரில் உள்ள புரதச்சத்தைவிட 9 மடங்கு அதிகம் உள்ளது.

தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட ...

வைட்டமின் ஏ கண், தோல் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் நோயின்றி இருக்க மிக அவசியம்.

இரும்புச்சத்தானது பிராணவாயுவை (ஆக்ஜிஸன்) இரத்த செல்களுடன் இணைக்க அவசியம்.

கால்சியமானது எலும்பு, பல் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (எலும்பு உடை நோய்) வராமல் தடுக்கும் மனிதனின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியம்.

பொதுவாக குழந்தைகள் முருங்கைக்காயினை உணவில் எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர், எனவே அத்தகைய சூழ்நிலையில், முருங்கைக்காயினை மதிப்புக்கூட்டப்பட்ட பாலாக தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் மட்டுமல்லாமல் எல்லா வயதினரும் அதனை விரும்பி அருந்துவார்கள்.

தாய்மார்கள் எவ்வளவு நாட்கள் ...முருங்கைக்காய் பால் தயாரிப்பு முறை:

தேவையான பொருட்கள்:

பால் 1 லிட்டர் முருங்கைக்காய் 20 எண்ணிக்கை சர்க்கரை 200 கிராம் செய்முறை:

• பாலை காய வைத்து ஆற வைக்கவும்.

• முருங்கைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும்.

• பின் முருங்கைக்காயில் உள்ள சதைப்பகுதியை மட்டும் ஒரு ஸ்பூன் உதவியுடன் எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் கூழ் பதம் வரும் வரை அரைக்கவும்.

• அரைத்த விழுதை காய்ச்சிய பாலுடன் சேர்த்து நன்கு கலக்கி அருந்தலாம் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்பானமாக அருந்தலாம்.

தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் ...

தாய்ப்பால் சுரக்கும் காய்கரிகள் மூலம் அதன் வகைகள்:

 • வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
 • சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.
 • வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போன்று செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
 • சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும்.
 • சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
 • தேன், அமுக்கராங்கிழங்கின் ரசம், மிளகுரசம், மணத்தக்காளி ரசம் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தூய்மையடையும்.
 • பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகமாக சுரக்கும்.
 • நத்தைச் சூரி வேரை 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.
 • முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
 • காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும்.
 • தாளிக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்!முன்னம்பால்... பின்னம்பால் எது ...மார்புக் காம்பு காயமடைந்தால் என்ன ...
முருங்கை போதும் தாய்பால் சுரக்கும்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top