medicne

மருத மரம் இலையின் மருத்துவம் பயன்கள்

Organic Arjuna Powder (Terminalia Arjuna) | Athreya Herbsமரத்தின் பெயர் : மருத மரம்

தாவரவியல் பெயர் : தெர்மினலியா அர்ஜூனா
ஆங்கில பெயர் : Arjuna Tree
தாயகம் : இந்தியா
மண் வகை : ஆற்று வண்டல் மற்றும் மணல் கலந்த மண்ணில் வளரும் மரம்
தாவர குடும்பம் : காம்ப்ர்டேசி மற்ற பெயர்கள் : அர்ஜூனா

பொதுப்பண்புகள் :

 மருத மரம் 30-60 மீ உயரம் வளரக்கூடிய மரமாகும்.
அடிமரத்தின் சுற்றளவு 7-10 மீ இருக்கும்.
மரப்பட்டை வெண்சாம்பல் நிறம் கொண்டிருக்கும். இலைக்காம்பு 2 செ.மீ நீளம் இருக்கும்.
மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில், முக்கியமானது மருத மரம். 🌳 மரத்தின் உட்புறம் சிவப்பு. உதிர்ந்த பூவும் சிவப்பு.

பயன்கள் :

மருத மரப்பட்டையில் ப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால் ரத்தம் உறைதலைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் மருத மரப்பட்டைக்கு உண்டு.

ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை (தலா மூன்று) மென்று விழுங்கினால், உடனடியாகக் குணமாகும்.

 இலை, பூ, காய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கொதிக்கவைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
இலையை அரைத்துப் பாலில் கலந்து, காலை-மாலை இரு வேளையும் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை குடித்து வந்தால், பித்த வெடிப்புகள் நீங்கும்.
இதன் பழத்தை நீராவியில் வேகவைத்து, பிசைந்து புண்களில் வைத்துக் கட்டினால், புண்கள் விரைவில் ஆறும்.
மருதம் பட்டையைப் பொடித்து, இரண்டு கிராம் அளவு எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மூட்டு வலி குறையும்.
இதன் பட்டை குடல் புண்ணிற்குப் பயன்படுகிறது. மற்றும் பல் சொத்தைக்குப் பயன்படுகிறது.
ஒற்றைத் தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் பருமன் போன்றவற்றிற்கும் இம்மரம் பயன்படுகிறது.File:Arjun.jpg - Wikimedia Commons

வளர்ப்பு முறைகள் :

 மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.
செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.
இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.

நோய் தடுக்கும் முறைகள் : 

இதில் நோய் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.
வேப்ப எண்ணெய் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கையின் அதிசயம்! - மருத மரம்- Dinamani
Also See :  பனை மரம் குளிர்ச்சி தரக்கூடிய மரம்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top