pazha வகைகள்

பெரிய நெல்லிகாய் மரம் வளர்ப்பு

benefits of amla: Amla benefits: தினமும் வெறும் ...

மரத்தின் பெயர் : பெரிய நெல்லி மரம்

தாவரவியல் பெயர் : பில்லாந்தஸ் எம்பிலிகா

ஆங்கில பெயர் : Gooseberry tree, Amla tree
தாயகம் : இந்தியா

மண் வகை : ஈரமான வளமுள்ள மணல்சாரி மண்ணில் வளரும் மரம்தாவர குடும்பம் : யுபோர்பியேசி

 இதில் பனாரசி, என்ஏ 7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர் போன்ற ரகங்கள் உள்ளன.சுவையான நெல்லிக்காய் சாதம் ரெசிபி ...

பயன்கள் :

 • வீசும் காற்றின் வேகத்தைத் தடுக்கும், தூசியினை வடிகட்டும் மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும் திறன் இந்த மரத்திற்கு உள்ளது.
 • பெருநெல்லிக்காய் தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
 • இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது. சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தைச் சீராக இயக்குகிறது.
 • நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
 • பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம் பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது.
 • காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளைப் போக்குகிறது.
 • ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வளர்ப்பு முறைகள் :
 • பெருநெல்லியை பயிரிட நிலத்தைத் தயார் செய்வதற்கு முன்னதாகவே நிலத்தில் தொழுஉரம், மண்புழு உரம் போன்றவற்றை போட்டு உழவு செய்து கொள்ள வேண்டும்.
 • இந்த சாகுபடியில் மொட்டு கட்டு முறை மற்றும் திசு வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பெருநெல்லி நாற்றுக்களை உருவாக்கலாம்.
 • மொட்டு கட்டும் முறையில், ஓராண்டு சென்ற தண்டின் பருமன் ஒரு செ.மீ இருக்கும்போது தாய் மரத்திலிருந்து மொட்டுக்களைத் தேர்ந்தெடுத்து நாற்றுக்களை உருவாக்கலாம்.
 • ஜூன் – ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பெருநெல்லி நாற்றுக்களை நடவு செய்யலாம். 9 மீ x 9 மீ என்ற இடைவெளியில் நடவு செய்யலாம்.
 • நடவு செய்வதற்கு முன்னதாக விதைகளை ஜீவாமிர்த கரைசலுடன் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
 • நோய் தடுக்கும் முறைகள்:

 • இளமையான புதிய நெல்லி செடிகளை இரண்டு அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் வளரவிடாமல் நேர் செய்து பின்னர் 4 – 5 கிளைகளைத் தகுந்த இடைவெளியில் சுற்றிலும் வளருமாறு விட்டு பராமரிக்க வேண்டும்.
 • இளஞ்செடிகளுக்கு செடி ஒன்றிற்கு 20 கிலோ தொழு எருவும், மரங்களுக்கு 20 கிலோ தொழு எருவுடன் பஞ்சகாவிய கரைசல், மீன் அமிலம் போன்றவற்றை உரமாக கொடுக்கலாம்.
 • பூக்கள் அதிகமாக பூக்க தேமோர் கரைசலையும், பூக்கள் கொட்டாமல் இருக்க தேங்காய்ப்பால் கடலைப் புண்ணாக்கும் கொடுத்து வந்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
 • காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறமும் கலந்தும் காணப்பட்டால் அந்த செடிகளுக்கு மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலையும், கற்பூர கரைசலையும் தெளித்து விட்டால் நாளடைவில் சரியாகிவிடும்.
 • வட்டமான துரு போன்ற அமைப்புகள், இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.முடி உதிர்வுக்கு குட்பை... அசத்தல் ...நெல்லிக்காய் சாகுபடியில் ...
Also See :  கால்நடைகள் நோய் தடுப்பு சில குறிப்பு
பெரிய நெல்லிகாய் மரம் வளர்ப்பு
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top