pazha வகைகள்

பலாமரம் பற்றிய சிறு குறிப்பு

பலா - தமிழ் விக்கிப்பீடியா மரத்தின் பெயர் : பலாமரம்

 • தாவரவியல் பெயர் : அர்டோகார்பஸ் ஹெட்டிரோபில்லஸ்
 • ஆங்கில பெயர் : Jackfruit tree
 • தாயகம் : இந்தியா
 • மண் வகை : ஈரப்பதம் அதிகமுள்ள பூமத்தியரேகைப்பகுதிகளில் மட்டுமே வளரும் மரம்
 • தாவர குடும்பம் : மோரேசி
 • மற்ற பெயர்கள் : சக்கப்பழ மரம்
 • பொதுப்பண்புகள்:

 •   தமிழ் மக்களின் முக்கனிகளில் ஒன்றெனப் பெருமையுடையது பலாமரம்.
 •  மேற்குத் தொடர்ச்சி மலையில் 1200 மீட்டர் உயரம் வரையுள்ள பசுமை மாறாக் காடுகளில் காணப்படும் மரமாகும். வடக்கே அஸ்ஸாமிலும் பீகாரிலும் அதிகமாக உள்ளன.
 • பயன்கள்:

 • பலாமர தழை கால்நடைகளுக்குத் தீவனமாகும்.
 • பலாக்கனியில் 29% அளவில் உண்ணக்கூடிய சுளைப் பகுதி 12% அளவில் விதை 59% அளவில் மேல் தோலுடன் கூடிய சக்கைப் பகுதி ஆகியவை உள்ளன.
 • பலாச் சுளைகளை நேரடியாக உண்பதுடன் சிரப், ஜாம், ஜெல்லி முதலியனவும் செய்திடலாம்.
 • பலாவின் காயிலிருந்தும் மரத்திலிருந்தும் பால் எடுக்கலாம். மரத்துப் பாலிற்கு பாக்டீரியக் கிருமிகளைத் தடுக்கும் திறன் உள்ளது. அதிலும் குச்சிகளின் பாலில் இத்திறன் நான்கு மடங்காக உள்ளது.
 • வயதான மரங்களின் வேர்களைக் கொண்டு படச் சட்டங்கள் தயாரிக்கின்றனர்.
 • மரம் வீணை, தம்புரா முதலிய இசைக் கருவிகள் செய்ய மிகவும் ஏற்றது. மேஜை, நாற்காலிகள் செய்ய மஹோ கனியைப் போன்று சிறந்ததாகும். கட்டிடச் சாமான்கள் செய்யலாம்.
 • பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
 • காபித்தோட்டங்களில் நிழல் மரமாகப் பயிரிட ஏற்றதாகும்.பலா மரம் - Pala Maram
 • வளர்ப்பு முறைகள்:

 • பலாமரம் ஈரப்பதம் அதிகமுள்ள பூமத்தியரேகைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. மழை குறைவாக இருப்பின், நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
 • நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும். சுண்ணாம்பு பாங்கான நிலத்தில் சற்று மெதுவாகத்தான் வளரும்.
 • வேர்ப்பகுதியில் நீர் தேங்குவது பலா மரத்திற்கு உகந்ததல்ல. இதனால் மரங்கள் பழம் தராமலோ வாடியோ போய்விடும்.
 • பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரில் ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும்.
 • விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும்.
 • பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை.
 • எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • பொதுவாக, பலாச்செடிகள் 3 – 7 வருடம் முதல் காய்க்கத் தொடங்கும்.
 • பலாமரம் ஆண் பூ, பெண் பூ என இருவகை பூக்கள் கொண்டது. ஆண் பூக்கள் கொத்தாக புதிய கிளைகளிலும், பெண் பூக்கள் கொத்தாக மரத்தண்டிலும், தடிமனான கிளைகளிலும் காணப்படுகின்றன. பூ பூத்த 3-8 மாதங்களில் பலாக்காய்கள் முற்றுகின்றன.
 • ஆசியாவில் பலாப்பழங்கள் முற்றும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 – 150 பழங்கள் வரை கிடைக்கும்.
 • பழங்கள் காம்பை அறுத்து மரத்திலிருந்து பறிக்கப்படுகின்றன. வெகுவாக பால் சிந்தினால் அது நன்கு முற்றாத பலாக்காய் என அறியலாம். நன்கு முற்றிய பலாக்காய்கள் சுமார் 40 கிலோ வரை எடை உடையவையாய் இருக்கும்.
 • பழத்தின் வெளிப்புறம் தடிமனான முட்களுடையதாயும், பச்சை நிறத்திலும் இருக்கும். உட்புறம் மஞ்சள் நிற சுளைகள், வெளிர் மர நிறத்திலான கொட்டைகளுடன் இருக்கும்.பலா மரத்தின் மருத்துவ பயன்களை ...Unwanted' jackfruit witnesses surge in demand as meat substitute ...
Also See :  வேப்ப மரம் எப்படி வளர்ப்பது?
பலாமரம் பற்றிய சிறு குறிப்பு
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top