vivasayam

கறவை மாடுகள் மற்றும் எருமைகள் வளர்ப்பு

கன்று ஈன்ற பசு மற்றும் எருமை ... கறவை மாடுகள் மற்றும் எருமைகள் வளர்ப்பில் சில முக்கிய ஆலோசனைகள்:

“பால் பண்ணை தொழில் லாபகரமாக அமைய இளம் வயதுள்ள மாடுகளை தேர்வு செய்வது முக்கியமானது.

• கால்நடைகளை நல்ல காற்றோட்டமுள்ள கொட்டகைகளில் அல்லது மர நிழல்களில் நிறுத்த வேண்டும்.

• வெப்ப தாக்கத்தை குறைக்க கால்நடைகளை முன் பகல் மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

• வெப்ப தாக்கத்தை குறைக்க எப்பொழுதும் குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்.

• கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்கு காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு குளிர்ந்த நீரை தெளிக்க வேண்டும்.

• அவ்வப்பொழுது கால்நடைகளுக்கு வெப்ப தாக்கம் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

• கால்நடைகளுக்கு தீவன திடல் அமைக்க வேண்டும். (10 சென்ட் மாதிரி தீவன திடல் – 4 செனட் CO 4, 3 சென்ட் – தீவன சோளம் (CO FS 29), 3 சென்ட் வேலிமசால்) ஓரங்களில் மரவகை தீவனமான அகத்தி, சூபாபுல்லை நடவு செய்யலாம்.

Also See :  மலைவேம்பு இயற்கை மருத்துவம்

• கொரோனா பாதிப்பால் பால் விலை 3-5 ரூபாய் லிட்டருக்கு குறைந்துள்ளதால் பால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். பால் உற்பத்தியில் 60-70% தீவனசெலவு எடுத்துக்கொள்வதால் பண்ணையாளர்கள் தாங்கள் அருகில் கிடைக்கும் மரபுசாரா தீவனத்தை அளிக்களாம்.

• யூரியா, கரும்பு ஆலை கழிவு (Pressmud) மற்றும் உப்பு பயன்படுத்தி வைக்கோலை செரியூட்டி கொடுப்பதால் கால்நடைகளுக்கு செரிமானம் அதிகரித்து உற்பத்தி பெருகும்.

• மண்ணில்லா (ஹைட்ரோ போனிக்ஸ்) விவசாய முறையில் விளைவித்த தீவனங்களை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தவும்.

ரூ. 27 லட்சத்துக்கு காங்கேயம் இன ...• மழை காலத்திற்கு முன்பு கால்நடைகளுக்கு குடற்புழு தொற்று ஏற்படும் என்பதால், கால்நடைகளின் சாண மாதிரியை அருகில் உள்ள நோய் புலனாய்வு ஆய்வகம் அல்லது பல்கலைக் கழக மையத்தில் அளித்து பரிசோதனை செய்து கொள்ளவும். • புற ஒட்டுண்ணியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி நீக்க மருந்தை பயன்படுத்தவும்.

• 3-6 மாத வயது உடைய கன்றுகளுக்கு தாது உப்பு கட்டிகளை கொட்டகைகளில் கட்டி தொங்கவிடுவதால், தாதுப்பு குறைப்பாட்டை கட்டுப்படுத்தலாம்.

Also See :  பலாமரம் பற்றிய சிறு குறிப்பு

• பால் மாடுகளுக்கு தானுவாஸ் தாதுப்பு 30 கிராம் தினமும் தீவனத்தில் அளிக்க வேண்டும்.

• வற்ற கறவை மாடுகளுக்கு தானுவாஸ் தாதுப்பு 15 கிராம்; தினமும் தீவனத்தில் அளிக்க வேண்டும்.

• தினமும் தீவனத்துடன் (NaCl) சாதாரண உப்பு 30 – 50 கிராம் அளிப்பதால் பால் அளவு அதிகரிக்கும்.

• பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்க மற்றும் மித அமில நோய் கட்டுப்படுத்த தினமும் தீவனத்தில் 30 -50 கிராம் சமையல் சோடா உப்பை கலந்துவிட வேண்டும்.

• நாள் ஒன்றுக்கு அசோலா 1-2 கிலோ வீதம் கறவை மாடுகளுக்கு அளிக்கலாம்.

• பீர் பூசா கழிவுகளை தினமும் 10 சதம் வரை மாடுகளுக்கு கொடுக்கலாம்.

• தானுவாஸ் மாஸ்டி காட் தெளிப்பானை பயன்படுத்தி மடி நோய் வராமல் பாதுகாக்கலாம். • விவசாயிகள் முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். எருமை வளர்ப்பில் நல்ல லாபம் பெற ...ரூ. 16 லட்சத்துக்கு காங்கேயம் இன ...

கறவை மாடுகள் மற்றும் எருமைகள் வளர்ப்பு
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top