PHOTOS

எளிய முறையில் வெள்ளாடு வளர்ப்பது எப்படி.?

பணக்காரராக்கும் வெள்ளாடு வளர்ப்பு ...

*வெள்ளாடு வளர்ப்பு*: 

*வெள்ளாடு வளர்ப்பின் சிறப்புகள்* :

1) குறைந்த முதலீடு 

2)ஒரு ஈற்றில் 2 முதல் 3 குட்டிகள் வரை ஈனும் திறன் கொண்டது. 

3)2 வருடத்தில் 3 முறை குட்டிகளை ஈனும் திறன் கொண்டது. 

4)15 முதல் 18 மாதங்களில் இனவிருத்திக்குத் தயாராகி விடும். 

5)இறைச்சி, பால், தோல், உரோமம் மற்றும் எருவிற்காக வளர்க்கலாம். 

6)  சுய வேலை வாய்ப்பிற்கு ஏற்ற தொழில். 

சிறந்த வெள்ளாடுகளை  எப்படி தேர்வு செய்வது ? 

*வெள்ளாடு தேர்வின் போது கவனிக்க வேண்டியவை* : 

1 ) தோற்றம் மற்றும் பாரம்பரிய குணாதிசயங்கள். 

2) இரண்டு பல் கொண்ட ஆடுகள் 

3) இண்டு குட்டிகளை ஈனும் பெட்டைகள் . 

4) நல்ல எடையுடைய கிடாக்கள் 

தரமான கிடாவின் தோற்றம் மற்றும் பண்பு : 

1) கூடுதலான உயரம் மற்றும் நீளமான உடல்வாகு.

2) அகன்ற மார்பு, கால்களில் நல்ல பலம். 

3) ஆண் உறுப்பு பெருத்து, உடலோடு நட்பிருத்தல் .

தரமான பெட்டை ஆட்டின் தோற்றம் மற்றும் பண்பு   

1)  நீண்ட பருமனான உடல்வாகு மற்றும் குறுகிய தோள் பகுதி 

2) அகன்ற இடுப்புப் பகுதி மற்றும் மிருதுவான மடி 

3) கறவைக்குப் பின் சுருங்கக் கூடிய மடி 

4) மிருதுவான, பளபளப்பான தோல்.  

ஆடு வளர்க்கும் முறைகள் : 

மேய்ச்சல் முறை : தினமும் 8 – 10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்புதல்.  திறந்த வெளி மேய்ச்சல் நிலம் தேவை.  இரவு தங்க சிரிய பட்டிக்கள் அமைக்க வேண்டும். 

Also See :  பெரிய நெல்லிகாய் மரம் வளர்ப்பு

*கொட்டில் முறை வார்ப்பு:* 

1) கொட்டகையிலேயே தீவனம் கொடுத்து வளர்த்தல்

2) ஒவ்வொரு ஆட்டுக்கும் 10-15 சதுர அடி கூரை வேய்ந்த இடம் தேவை. 

3) மேலும்,  25-30 சதுர அடி திறந்த வெளியும் தேவை. 

மேய்ச்சலுடன் கூடுதல் தீவனம் இடும் முறை : 

தினமும்  6 – 8 மணி நேர மேய்ச்சலுக்குப் பிறகு கொட்டகைகளில்  அடைத்து பசுந்தீவனம் மற்றும் சிறிது அடர் தீவனம் அளித்து பராமரிக்க வேண்டும். 

ஆடுகளுக்கு கொட்டகை :  

*கொட்டகையமைக்கும் போது கவனிக்க வேண்டியவை* ! 

மேடான இடத்தில் கொட்டகை அமைக்கவும். 

கொட்டகையை சுற்றி தீவன மரங்கள் வளர்க்கவும். 

சுத்தமான குடிநீர் கிடைக்க வழி செய்யவும். 

கொட்டகையின் மண் தணயானது, உறுதியானதாகவும், ஈரம் உறிஞ்சும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். 

கொட்டகையின் நீண்ட முகப்பு கிழக்கு, மேற்காக அமைப்பதால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். 

கொட்டகையின் உயரம் 12 அடி இருக்க வேண்டும். 

குட்டிகளுக்கு 4 ச.அடி இடமும், பெட்டை ஆடுகளுக்கு 10 – 15 ச.அடி இடமும், கிடாக்களுக்கு 15 – 20 ச.அடி  இடவசதியும் அளிக்க வேண்டும். 

தீவன மேலாண்மை : ஆடுகள் மரங்களின் இலைகளை எளிதில் செரிக்கும் தன்மை உடையவை.

Also See :  வெப்பாலை மருத்துவக்குணம்

  *பசுந்தீவனத் தேவை அளவு*: 

 (ஒரு வளர்ந்த வெள்ளாட்டிற்கான  பசுந்தி வனத் தேவை நாள் ஒன்றுக்கு 5 – 6  கிலோ)  புல் வகை பசுந்தீவனம் 3.5கி  பயறுவகைத் தீவனம்  2.0கி  மரத்தழைகள்               1.5 கி 

*அடர்தீவனத் தேவை* 

1)   3 – 6 மாத    குட்டிகளுக்கு  150 கிராம் 

2) ஆடுகளுக்கு அதன்       எடையில்  1.5 சதவிகிதம் கொடுக்க வேண்டும். 

வெள்ளாடுகழுக்கு பசுந்தீவனத்தோடு, அடர் தீவனம் கலந்து கொடுத்தால்  அதன் எடை வேகமாக அதிகரிக்கும். மேய்ச்சல் குறைவாக உள்ள காலங்களில் அடர்தீவனத்திற்கு மாற்றாக முழுத்தீவனம் தயாரித்து வளர்ந்த ஆட்டுக்கு 1 கிலோ மேய்ச்சலுக்குப்பின் கொடுப்பதன் மூலம் தீவனச் செலவை குறைத்து வருடம் முழுவதும் ஆடுகளை நல்ல முறையில் வளர்க்கலாம். 

*தீவனம்   – பங்கு (சதவிகிதம்)*

சோளத்தட்டை              30 

உலர்ந்த சுபாபுல்இலை   20

தவிடு               .

17 சீமைக்கருவேல்             30 

மரக்காய் / நெற்று

தாது உப்பு கலவை          

2 அயோடின் கலந்த  சமையல்  உப்பு 1

எளிய முறையில் வெள்ளாடு வளர்ப்பது எப்படி.?
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top