உளுந்து/பாசிப்பயிறு சாகுபடி செய்ய சில முக்கிய ஆலோசனைகள்:

• அதிக மகசூல் தரும் உளுந்து இரகங்கள் வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 10 மற்றும் 11, பாசிப் பயறு இரகங்கள், கோ 8 வம்பன் 3 வம்பன் 4 மற்றும் கேகேஎம் 1.

• விதை நேர்த்திக்கு விதைகளை டிரைக்கோடெர்மா விரிடே 4 கிராம் (அ) சூடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் மற்றும் 10 கிராம் (அ) கார்பெண்டாசிம் 2 கிராம்/கிலோ விதை.

• மஞ்சள் தேமல் நச்சுயிரி நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படடுத்த விதை நேர்த்திக்கு இமிடாகுளோப்ரிட் 5 மிலி/கிலோ விதை.

• விதை கடினமாக்ககுதலுக்கு 100 பிபிஎம் ஜிங்சல்பேட் (10 கிராம்/1000 லிட்டர் தண்ணீர்) கரைசலில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் 1/3 பங்கு தண்ணீர் விதை முளைப்பதை அதிகரிக்கும் மற்றும் வறட்சியை தாங்கும்.

• போதிய அளவு பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க விதைப்பு இயந்திரம் மூலம் விதைக்க வேண்டும்.

• காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு பயிரிடவும்.

• சிறிய நீர் தெளிப்பான்களை அமைக்க வேண்டும். (மத்திய/மாநில அரசுகளின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் கொடுக்கப்படும்)

• களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளித்தல் (அ) விதைத்து 15-20 நாட்களுக்கு முன்பு ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.

• பூச்சிகளை கண்காணிக்க விளக்கு பொறி (1 பொறி/ஏக்கர்) வைக்க வேண்டும்.

• நன்கு பூ எடுக்கும் தருணத்தில் இலைவழியாக தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழக பயறு அதிசயம் (Pulse Wonder) 2 கிலோ/ஏக்கர் தெளிக்க வேண்டும்.

• மஞ்சள் தேமல் நச்சுயிரி நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படடுத்த இமிடாகுளோப்ரிட் 17.8 SL 100 மிலி/ஏக்கர் (அ) தையாமீத்தாக்ஸாம் 75 WS 1 கிராம்/3 லிட்டர் தெளிக்கவும்.

• காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த குளோராட்ரானில் பிரோல் 18.5% SC 60 மிலி/ ஏக்கர் தெளிக்கவும். 10% பொருளாதார சேத நிலையை தாண்டும் போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

• வறட்சி மேலாண்மைக்கு 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது (அ) இலை வழியாக பிபிஎப்எம் 1 சதவிகித கரைசல் (10 மிலி/லிட்டர் தண்ணீர்) தெளிப்பதன் மூலம் மானாவாரி சாகுபடியில் வறட்சியை கட்டுப்படுத்தலாம்.

உளுந்து/பாசிப்பயிறு எவ்வாறு சாகுபடி செய்யலாம்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top