pazha வகைகள்

இலந்தை மரம் வளர்ப்பது எப்படி.?

Herbal Plants: Ziziphus mauritiana - இலந்தை பழம் ...இலந்தை மரம்:

தாவரவியல் பெயர் : சிசிபஸ் ஜுஜுபா
ஆங்கில பெயர் : Jujube tree
தாயகம் : இந்தியா
மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்
தாவர குடும்பம் : ராம்னேசியே

பொதுப்பண்புகள் :

  •  இந்த மரம் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. இலந்தை மரம் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய மரமாகும்.
  • குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.
  • தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் இலந்தைமரம் அதிகம் வளர்கிறது. மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம் ...
  • பயன்கள் :

  • வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.
  • உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.
  • உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
  • உடலில் மேற்பகுதில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது இந்த இலைகளை அரைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
  • 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74%, மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
  • இலந்தை பழம் உண்பதால் மூளை புத்துணர்வு பெறும்.
  • இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருள்களாகப் பயன்படுகின்றன.
  • மரப்பட்டையை அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து சிரங்குகள், உடம்பில் காயம்பட்ட இடங்களின் மீது தேய்த்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது.இலந்தை மருத்துவ பயன்கள் – சித்த ...
  • வளர்ப்பு முறைகள் :

  • இலந்தையில் பல இரகங்கள் உள்ளன. பனரசி, உம்ரான், கோலா, கைத்தளி, முண்டியா மற்றும் கோமா கீர்த்தி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • அனைத்து மாதத்திலும் பயிர் செய்ய ஏற்றது இலந்தை மரம். ஆனால் மார்கழி மாதம் சிறந்த பருவம் ஆகும்.
  • இலந்தையை உவர் நிலங்களில் வறட்சிப் பகுதிகளில் பயிரிடலாம். இருமண்பாட்டு செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.
  • குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊரவிட்டு விதையை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் தரம் பிரிக்கப்பட்டு , பெரிய விதைகளை விதைத்துவிட வேண்டும்.
  • நிலத்தை நன்கு உழுது 8 மிட்டர் இடைவெளியில் 1 மிட்டர் ஆழ, அகல மற்றும் நீளத்தில் குழிகள் எடுக்க வேண்டும். பின்பு 2 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் கொண்டு குழிகளை நிரப்பி நீர் பாய்ச்சி குழிகளை ஆறவிட வேண்டும்.
  • 6- 12 மாதங்கள் ஆன நாற்றுகளை குழிகளில் நடவு செய்யலாம்.
  • இளஞ்செடிகளுக்கு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாகப் பயிரிடப்பட்டு இலந்தை மரங்களுக்குத் தேவையான நீரைத் தேக்குவதற்கு சாய்வுப் பாத்திகளை பெரிதாக அமைக்கவேண்டும்.
  • எனினும், காய்ப்பிடிப்பு நேரத்தில் நீர் பாய்ச்சினால் அதிகமான காய்ப்பிடிப்பு ஏற்படும். காய்க்கத் தொடங்கிய இலந்தை மரங்களுக்கு குறைவான நீர் போதுமானது.
  • ஒரு வருட வளர்ச்சியுள்ள மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 20 கிலோ தொழு உரம், 1 கிலோ அளவுக்கு தழை, சாம்பல், மனிசத்துள்ள உரம் இட வேண்டும். இரண்டு வருடத்திற்கு பின் 30 கிலோ அளவுள்ள உரங்களை இட வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.
  • பழங்கள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்பொழுது அறுவடை செய்ய வேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 70 – 80 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்
Also See :  மருத மரம் இலையின் மருத்துவம் பயன்கள்
இன்றைய மருத்துவ சிந்தனை இலந்தை- Dinamaniஇலந்தை மரம் - தமிழ் விக்சனரிஇலந்தை மரம் பயன்கள் | இலந்தை | Herbals Uses ...
இலந்தை மரம் வளர்ப்பது எப்படி.?
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top